2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நிறை குறைந்த பாண்; ஆதாரத்துடன் முறைப்பாடு

Freelancer   / 2021 டிசெம்பர் 13 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி - பாத்தும்பறைத் தொகுதியிலுள்ள மடவளைப் பிரதேசத்தில் விற்கப்படும் பாணின் நிறை குறைவாக இருப்பதாக நுகர்வோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

பொதுவாக ஒரு பாணின் நிறை 450 கிராமாக இருக்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைத் தெரிவித்த போதும், மடவளை நகரக் கடைகளில் விற்கப்படும் பாண்களின் நிறை 270 கிராம் முதல் 290 கிராம் வரையே காணப்படுகின்து.

80 ரூபாவிற்கு விற்கப்படும் பாணின் நிறை 285 கிராம் அளவைக் காட்டுவதை படத்தில் காணலாம். 

இது தொடர்பாக முறைப்பாடுகள் செய்யப்பட்டபோதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள்  தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X