R.Maheshwary / 2022 ஜூன் 06 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் செயல்பாடுகள், மலையக பகுதிகளில் தோட்ட நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் சில குறைப்பாடுகள் உள்ளன. அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இந்த நிவாரணத்தை பகிர்ந்தளிப்பதில் ஏற்பட்ட அரசியல் தலையீடுகள் காரணமாக தற்காலிகமாக நிவாரணத்தை வழங்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டன. பெருந்தோட்டப் பகுதிகளுக்கு நிவாரணத்தை விரைவாக வழங்கும் தேவையை பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசென்று அந்தப் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.
பெருந்தோட்டப்பகுதிகளில் தோட்ட நிர்வாகத்தினரால் மாத்திரமே நிவாரணப் பொதிகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கு எவ்வித அரசியல் தலையீடுகளும் இருக்க கூடாது. அவ்வாறான தகவல்கள் இருந்தால் உடனடியாக தெரியப்படுத்தவும்.
இதேவேளை, தோட்டத்தில் பணிப்புரியாதவர்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கப்படவில்லையென குற்றச்சாட்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவ்வாறானவர்கள் உடனடியாக பிரதேச செயலாளரை தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago