Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணங்கள் இருக்குமாயின், அது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, சட்ட மா அதிபருக்கு, உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட பண்டாரவளை பிரதேச மக்கள், தமக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.
மேற்படி மனு, ஈவா வனசுந்தர, விஜித் மலல்கொட மற்றும் எல்.டீ.பீ.தெஹிதெனிய உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாத்தினால், நேற்று முன்தினம் ஆராயப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதில் தாமதம் நிலவுவதாக புலப்படுவதாகவும், இதனைக் கருத்திற்கொண்டு, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த மனுவில், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர், போக்குவரத்து மற்றும் விவசாய அமைச்சின் செயலாளர் , மத்திய சுற்றாடல் அதிகார சபை , சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
உமா ஓயா பல்நோக்கி அபிவிருத்தித்திட்டம் காரணமாக, பதுளை மாவட்டத்தில், சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை, பண்டாரவளை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளே, அதிகளவு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.
இந்தப் பகுதிகளில் மண்சரிவுகள், நீர் நிலைகள் வற்றிப்போதல் மற்றும் வாழ்வாதாரப் பாதிப்புகள் உள்ளிட்ட பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேலும் , ஏழாயிரத்துக்கும் அதிகமான வீடுகள் வெடிப்புக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago