R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 25 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
வனராஜா- சமர்வில் தோட்டத்தில் இந்த மாதம் 7ஆம் திகதி பொறியில் சிக்கி உயிரிழந்த சிறுத்தையின் மரணத்துக்கு காரணம் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுத்தையின் மரணம் தொடர்பில் ஆராயுமாறு நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பொறியில் சிக்கிய சிறுத்தை நீண்ட நேரமாக மரத்தில் தொங்கிக்கொண்டு இருந்தால், சிறுத்தையின் உடலினுள் ஏற்பட்ட காயங்களால் சிறுத்தை உயிரிழந்துள்ளதாகவும் வெட்டிய மரத்தில் அகப்பட்டு சிறுத்தை உயிரிழக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் மரத்தை வெட்டுவதற்கு அனுமதியளிக்க முடியாதென்றும் மாற்றுவழி இன்மையால் மரம் வெட்டுபட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மரத்தை வெட்ட அனுமதியளித்த அதிகாரிகள் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த சிறுத்தைகளை பாதுகாப்பது தொடர்பான 25 பரிந்துரைகளை மூவரடங்கிய குழு அமைச்சரிடம் முன்வைத்துள்ளது.
3 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
2 hours ago
2 hours ago