2026 ஜனவரி 21, புதன்கிழமை

நீதி கோரி போராட்டம்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 01 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

டயகம சிறுமி இஸாலினியின் மரணத்தில் ஏற்பட்டுள்ள மர்மத்தை கண்டுபிடித்து அரசாங்கம்  குற்றவாளிகளுக்கு  தகுந்த தண்டனை வழங்க வேண்டும், உள்ளிட்ட  பல கோரிக்கைகளை முன்வைத்து டயகம ஐந்தாம் பிரிவு தொழிலாளர்கள் நேற்றையதினம் (31)  போராட்டத்தில்  ஈடுப்பட்டனர்.

இப்போராட்டத்தில் கலந்து கொண்டோர் ”16 வயது இசாலினியை டயகம மக்கள் வறுமை காரணமாக இழந்து விட்டோம். அவரின் இழப்பு மலையகத்தின் சிறுவர்களுக்கு கடைசி இழப்பாக இருக்க வேண்டும், இசாலினியின் மரணம் மலையகத்தை விழிக்க செய்துள்ளதுடன் வறுமை காரணமாக சிறுவர்களை செல்வந்தர்களின் வீடுகளுக்கு தொழிலுக்கு அனுப்பக்கூடாது என்ற பாடத்தை கற்பித்துள்ளது” எனத் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X