2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நீரில் மூழ்கி மாணவன் பலி

Editorial   / 2018 மார்ச் 22 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு சக மாணவர்களுடன் சுற்றுலா மேற்கொண்டிருந்த மாணவர் ஒருவர், கொத்மலை ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ளாரென, கொதமலை பொலிஸார் தெரிவித்தனர் 

கொழும்பு ஹமீத் ஹல் உசைனியா தேசிய பாடசாலையில், க.பொ.த உயர்தர பிரிவில் கல்வி பயின்றுவந்த மாணவர் ஒருவரே, இன்று (22) பகல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மேற்படி பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் 42 மாணவர்கள்,  தமது ஆசிரியர்கள் இருவருடன் நுவரெலியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் கொத்மலை ஆற்றில் குளிப்பதற்காகச் சென்றபோதே, மேற்படி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளாரெனத் தெரியவருகிறது.

சுழியில் சிக்குண்ட மாணவனை, ஏனைய மாணவர்கள் மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட போதிலும் அது பலனளிக்கவில்லை என்றும் பிரதேச மக்களின் உதவியுடன் சடலம், இன்று மாலை மீட்கப்பட்டதெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக, கொத்மலை பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X