R.Maheshwary / 2022 ஜூலை 21 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
நெல்லிகல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள குளத்தில், நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (20) பகல் குறித்த மாணவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் நீராடச் சென்று, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் இதனை அவதானித்த பிரதேசவாசி ஒருவர், பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, அவர்களின் சடலம் மீட்கப்பட்டு பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் யாலதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதான சுப்ரமணியம் விஸ்வா, மொஹமட் அபராத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago