Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Freelancer / 2023 மார்ச் 14 , மு.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
காமினி பண்டார இலங்க திலக்க
மஸ்கெலியா, ஸ்டெஸ்பி தேயிலைத் தோட்டத்தில் நீரூற்றுகள் இருக்கும் பிரதேசங்களை பாதுகாக்கும் நோக்கில் மரக்கன்றுகள் நடப்படும் வேலைத்திட்டம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.
நீரூற்றுகளை பாதுகாத்தல், வனாந்தரங்களுக்கு தீ மூட்டுவதைக் கட்டுப்படுத்தல் உள்ளிட்டவை தொடர்பில் பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெளிவூட்டும் செயற்பாடுகள் சாமிமலை, கவரவிரவல மற்றும் தேவகந்த ஆகிய பாடசாலைகளில் இடம்பெற்றன.
நீரூற்று பகுதிகளை பாதுகாக்கும் வகையில், சுமார் 380 மரக்கன்றுகள், அன்றைய தினம் நாட்டி வைக்கப்பட்டன.
வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஹட்டன் காரியாலயம் மற்றும் ஸ்டெஸ்பி தோட்ட நலன்புரி சங்கத்தின் ஊடாக இந்த வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago