2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

நீரோடையில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

Freelancer   / 2023 செப்டெம்பர் 09 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு செ.திவாகரன்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிளரண்டன் பகுதியில் நேற்று (08) இரவு காணாமல்போன ஆண் ஒருவர்  இன்று (09) சனிக்கிழமை காலை கிரிமெட்டிய பகுதியில்  உள்ள சிறிய  நீரோடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நானுஓயா கிளரண்டன் கீழ் பிரிவைச் சேர்ந்த நான்கு  பிள்ளைகளின் தந்தையான சித்திரபாலன் மகேஸ்வரன், வயது 49 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நீரோடையில் சடலமொன்று இருப்பதாக பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, குறித்த இடத்திற்கு விரைந்த நானுஓயா பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

நானுஓயா கிரிமெட்டி  நகரப்பகுதிக்கு பொருட்கள் வாங்குவதற்கு செல்வதாக நேற்று இரவு வீட்டில் கூறிவிட்டு சென்றவர் இன்று (09) காலை வரை வீட்டுக்கு வராதமையினால் உறவினர்களும், பிரதேவாசிகளும் தேடியுள்ளனர்.

இதனையடுத்து இவர் இவ்வாறு நீரோடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது  வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது கொலையா தற்கொலையா என பலகோணங்களில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X