2025 ஜூலை 07, திங்கட்கிழமை

“நீர்நிலைகள் குறித்து அவதானம் தேவை”

மு.இராமச்சந்திரன்   / 2017 நவம்பர் 06 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மலையகப் பகுதிகளுக்கு சுற்றுலா மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள், நீர்நிலைகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டுமென்று, அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

குறிப்பாக, நீர்நிலைகளில் வைக்கப்பட்டுள்ள அறிவித்தல் பலகைகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடப்பதே சிறந்தது என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

“ தற்போது நீடித்து வரும் சீரற்ற வானிலை காரணமாக, நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரிக்கும்போது, திடீரென நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளையும் திறந்துவிட வேண்டிய சூழல் ஏற்படும். இதனால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுக்கலாம். எனவே, ஆறுகளில் குளிப்பதற்காகச் செல்வோர், மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.

'மழை வானிலை குறையும்வரை ஆறுகளில் குளிப்பதைத் தவிர்த்துக்கொள்வதே சிறந்தது. குறிப்பாக வெளிமாவட்டங்களிலிருந்து, நுவரெலியா, கண்டி, மாத்தளைக்கு வரும் சுற்றுலா பயணிகள், வானிலை குறித்து  கவனம் செலுத்த வேண்டும்” என்றும், அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .