Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 23 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ரமேஸ்
லிந்துலை - எல்ஜின் தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நீர்மின் உற்பத்தி நிலையத்தால், அப்பகுதியில் வாழும் மக்கள், எதிர்காலத்தில் பாரிய ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடுமென்பதால், அந்தத் திட்டத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கு, அக்கரப்பத்தனை பிரதேச சபை முன்வர வேண்டுமென, அக்கரப்பத்தனை பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.சிவானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
எல்ஜின் தோட்டத்தில், 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இப்பகுதியில் முன்னெடுக்கப்படும் நீர்மின் உற்பத்தி நிலையத்தால், அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இலாபம் கிடைத்தாலும், இம்மக்களுக்கு எந்த இலாபமும் கிடைக்கப் போவதில்லையென்றும் சாடியுள்ளார்.
மேற்படி நீர்மின் உற்பத்தி நிலையத்துக்கு, குடியிருப்புப் பகுதிகளை ஊடறுத்தே, நீர் கொண்டுவரப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர், நீரைக் கொண்டுவருவதற்கான நீர்க் குழாய்கள் பொருத்தப்படுவதற்காக, பாரியளவில் வடிகான்கள் தோண்டப்படுவதால், அப்பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில், வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், இங்கு வாழும் மக்கள் அச்சத்தில் உள்ளனர் என்றும் இவ்விடயம் தொடர்பாக, அக்கரப்பத்தனை பிரதேச சபையின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டாலும், சபை இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமல் உள்ளமையானது, அந்த மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும் என்றும் தெரிவித்தார்.
எனவே, இவ்விடயம் தொடர்பில், அக்கரப்பத்தனை பிரதேச சபை கவனஞ்செலுத்த வேண்டும் என்பதுடன், அங்கு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை இடைநிறுத்தி, சம்பந்தப்பட்ட நிர்வாகத்துடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டுமென்றும், அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட ஒடிடன் தோட்ட மக்கள், பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும் மேற்படி தோட்டம், தனியார் ஒருவருக்குச் சொந்தமானதென்றும், குறித்தத் தோட்டத்தைச் சேர்ந்த மக்கள், நிர்வாகக் கெடுடிபிடிக்குள் சிக்கித் தவிக்கின்றனர் என்றும், சிவானந்தன் தெரிவித்துள்ளார்.
இங்குள்ள தேயிலைக் காணிகள், வெளியாருக்கு விற்பனைச் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால், தொழிலாளர்கள் தமது தொழிலை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்ட அவர், இவ்விடயம் தொடர்பிலும், சபை கவனஞ்செலுத்த வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்துள்ளார்.
24 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
1 hours ago