2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நுண்கலைக் கல்லூரியின் பரிசளிப்பு விழா

Editorial   / 2018 ஜூலை 31 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்

ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த டிக்கோயா நுண்கலைக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (3) முற்பகல் 10 மணிக்கு, அதிபர் எம்.மூவேந்தன் தலைமையில், கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் மத்திய மாகாண தமிழ்க் கல்வியமைச்சர் எம்.ராமேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார். அவரோடு காப்பாளராக, ஹட்டன் வலய கல்விப் பணிப்பாளர் பி.ஸ்ரீதரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், ஏ.பிலிப்குமார், ஹட்டன் - டிக்கோயா நகர சபைத் தவிசாளர் எஸ். பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது, பல்வேறு துறைகளிலும் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் சான்றிதழ், பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர். இதன்போது, மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X