Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
நுவரெலியா வசந்த காலத்தையொட்டி, நுவரெலியா ரோட்டறிக் கழகம் ஏற்பாடு செய்துள்ள ஆண், பெண் இருபாலாருக்குமான மரதன் ஒட்டப் போட்டிகள், எதிர்வரும் 28ஆம் திகதியன்று நடைபெறவுள்ளன.
இவை, திறந்த மட்டப் போட்டிகளாக நடைபெறவுள்ளன. மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த மரதன் போட்டிகள், 2.5 கிலோமீற்றர், 5 கிலோமீற்றர், 10 கிலோமீற்றர் ஆகிய தூரங்களைக் கொண்டுள்ளன.
இதில், நுவரெலியா மாவட்டத்திலுள்ள இளைஞர், யுவதிகள் பங்குபற்ற முடியும். போட்டிகளில் பங்குபற்ற விரும்புகின்றவர்கள், இலக்கம் - 80, கண்டி வீதி, நுவரெலியா எனும் முகவரிக்கு, விண்ணப்பங்களை அனுப்பவும்.
மேலதிக விவரங்களுக்கு, 077-1092026 / 077-3752842 எனும் அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
போட்டியில் பங்குபற்றுகின்ற அனைவரும், போட்டி நடைபெறும் தினம் காலை, வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அனுமதிக்கப்படுவார்களென, போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago