Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Gavitha / 2020 நவம்பர் 26 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், ஆ.ரமேஸ்
கொழும்பு உள்ளிட்ட கொரோனா ஆபத்து வலயங்களாக உள்ள பகுதிகளில் இருந்து நுவரெலியா மாவட்டத்துக்குள் வரும் அனைவருக்கும், பிசிஆர் பரிசோதனைகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு வருபவர்களிடம் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலம், நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை, முடிந்தளவு கட்டுப்படுத்த முடியும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், இன்று (26) மாத்திரம், நுவரெலியா மாவட்டத்தில் 7 பேர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து ஹட்டன் பகுதிக்கு வருவோருக்கு, கினிகத்தேன, கலுக்கல பகுதிலும், நுவரெலியாவுக்கு வருபவர்களுக்கு, நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் கொத்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்பட சந்தியிலும் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்தில், இன்று (26) இதுவரைக்கும் 103 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் பிரதாப் சிங்க தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம், இதுவரை 2,957 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் பேலியகொடை மீன் சந்தை, பிரெண்டெக்ஸ் தொழிற்சாலை மற்றும் கொழும்பில் இருந்து வந்தவர்களே, இவ்வாறு தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago