2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

நுவரெலியா ஆணையாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Janu   / 2025 செப்டெம்பர் 30 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா நகரில் உள்ள சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட அங்காடி வியாபாரிகள் நுவரெலியா மாவட்ட ஆணையாளர் பதவி விலக வேண்டும் என கோரி செவ்வாய்க்கிழமை (30) காலை 11 மணி முதல் 12.30 மணி வரை ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

நுவரெலியா மாவட்ட ஆணையாளர் தற்போது உள்ள அரசாங்கத்தின் பணிப்புரைகளை கணக்கெடுப்பது இல்லை அரசுக்கு எதிராக செயல்படுகிறார். அதன் காரணமாக நகரில் எந்த ஒரு அபிவிருத்தியும் இல்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

 இன்றைய அரசு நுவரெலியா நகரை அபிவிருத்தி செய்ய முன்வந்த போதும், தற்போது உள்ள ஆணையாளர் செய்ய மறுத்து வருகிறார் அவரை உடனடியாக நுவரெலியா மாவட்டத்தில் இருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

எஸ்.கௌசல்யா

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .