2025 மே 12, திங்கட்கிழமை

நுவரெலியா-கொழும்புக்கான பஸ்சேவை இடைநிறுத்தம்

Kogilavani   / 2020 ஒக்டோபர் 22 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையால், நுவரெலியாவிலிருந்து கொழும்புக்கான பஸ் சேவைகள், இன்று (22) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, இலங்கைப் போக்குவரத்துச் சபையின் நுவரெலியா டிப்போவுக்கான அதிகாரி உதயசூரிய பண்டார தெரிவித்தார்.

இ.போ.ச பஸ்கள், தனியார் பஸ்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் நுவரெலியாவிலிருந்து கண்டி, குருநாகலை, பாணந்துறை, உட்பட பதுளை, பண்டாரவளை போன்ற வெளிமாவட்டங்களுக்கு வழமையான பஸ் போக்குவரத்து இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X