Janu / 2025 ஜூன் 18 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாநகரசபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தெரிவுசெய்வதற்கான கூட்டம் மத்திய மாகாண உள்ளுராட்சிமன்ற ஆணையாளர் தலைமையில் மாநரசபையில் புதன்கிழமை (18) நடைபெற்றது.
இதன்போது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் உபாலி வணிகசேகர 14 வாக்குகளைப் பெற்று முதல்வரானார்.
நுவரெலியா மாநகரசபையில் தேசிய மக்கள் சக்திக்கு 12 ஆசனங்கள் உள்ள நிலையில், இ.தொ.காவின் இரு உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர். நுவரெலியா மாநகரசபையின் பிரதி மேயராக இதொகா உறுப்பினர் சிவன்ஜோதி யோகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுமார் இரு தசாப்தங்களுக்கு பிறகு நுவரெலியா மாநகரில் பிரதி மேயர் பதவியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுள்ளது.
5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago