Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 31 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுஜிதா
நுவரெலியா மாவட்டத்திலுள்ள சகலருக்கும் துரித கதியில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை
எடுப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் திருப்திகரமாக அமையவில்லை என்றும் சில பகுதிகளில் தடுப்பூசிகள் வழங்காத நிலை இருக்கின்றமைத் தொடர்பில், சுகாதார அமைச்சரிடம் நேற்று (30) காலை தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டதாகவும் இதன்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளதாகவும் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பெருந்தோட்ட மக்கள் தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தினால்
அவர்களுக்கான செலுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் சுகாதார அமைச்சரிடம் தான் முன்வைத்ததாக தெரிவித்துள்ளார்.
இதன்போது, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஏதாவது ஒரு ஆவணம்
கொண்டுவரும் பட்சத்தில் அவர்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குமாறு மத்திய மாகாண சுகாதார பணிப்பாளருக்கு சுகாதார அமைச்சர்
உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago