Editorial / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன், எஸ்.சுஜிதா, எஸ்.கணேசன், கௌசல்யா
கலைஞர்களுக்கான அரச விருது வழங்கல் விழா 2019ஆம் ஆண்டில், நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, மகஜரொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அரச விருது வழங்கும் விழா, கொழும்பு தாமரைத் தடாகத்தில் நடைபெற்றிருந்தது.
இதன்போது, நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களில் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தமைக்கு அமைய, 5,000 விண்ணப்பங்கள் தங்களுக்குக் கிடைக்கப்பெற்றதாக, அரச கரும மொழிகள் மற்றும் இந்து கலாசார அமைச்சு மற்றும் அதன் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்திருந்தனர்.
இதற்கமைய, 5,000 விண்ணப்பங்களில் இருந்து, 224 பேரைத் தெரிவு செய்து, அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருந்தன.
எனினும், இந்த விழாவில், நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என, பல தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு, நேற்று (08), ஹட்டனிலுள்ள விருந்தகமொன்றில் இடம்பெற்றிருந்தது.
நுவரெலியா மாவட்ட இசைக்கலைஞர்களின் அபிவிருத்தி ஒன்றியமும் தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கமும் இணைந்து, இந்த சந்திப்பை நடத்தியிருந்தனர்.
இதன்போது, குறித்த அமைப்புகளின் நிர்வாகிகள், நுவரெலியா மாவட்டத்துக்குட்ட கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்ட விவகாரம் குறித்து தங்களது அதிருப்தியை வெளியிட்டதுடன், இந்நிகழ்வில் கலந்துகொண்ட நுவரெலியா மாவட்ட இசைக்கலைஞர் அபிவிருத்தி ஒன்றியத்தின் நிர்வாகிகளால், ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையிலான மகஜரொன்றை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரிடம் கையளித்தனர்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, கொழும்பு நகரிலும் வடகிழக்கிலும் வாழும் தமிழ் பேசும் மக்களையும் மட்டும் மய்யமாக வைத்து, குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் மலையகத்திலுள்ள கலைஞர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக, தகவல் அறியும் சட்ட மூலத்தினூடாக தகவல்களைத் திரட்டி சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
28 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026