2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

நுவரெலிய துப்பாக்கி சூட்டில் ஜோடி பலி

Editorial   / 2023 ஓகஸ்ட் 08 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா – டொப்பாஸ் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளம் தம்பதியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுவடைந்ததை அடுத்து, கணவரினால் மனைவி சூட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் கூறுகின்றனர்.

சம்பவத்தில் திருமணமாகி எட்டே மாதங்களான இளம் கணவன்,மனைவியான 
எண்டன் தாஸ் (வயது 32) மற்றும் நாதன் ரீட்டா (வயது 32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை பயன்படுத்தியே இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கௌசல்யா, டி.சந்ரு, செ.திவாகரன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X