Kogilavani / 2021 பெப்ரவரி 10 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ், எம்.கிருஸ்ணா
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை வெளியான பிசிஆர் அறிக்கையின் முடிவுகளுக்கு அமையவே, மேற்படி தாதிக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்படி தாதியின் குடும்ப உறுப்பினர்கள், இன்று (10) பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, லிந்துலை பொதுசுகாதார பிரிவுக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை, லிந்துலை, மெராயா நகர் ஆகிய பகுதிகளில், நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இப்பிரதேசத்தில் 12 குடும்பங்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொகவந்தலாவ ஹோலிரோஸ்சரி தமிழ் மகா வித்தியாலத்தின் மாணவன் உட்பட 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேற்படிப் பாடசாலையின் 75 மாணவர்கள், 10 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


27 minute ago
35 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
35 minute ago
56 minute ago