2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நெல்லிமலைத் தோட்டத்தில் மூவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர்

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 27 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்

கண்டி- பன்விலை நெல்லிமலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் மூவர் குளவிக் ​கொட்டுக்கு இலக்காகினர்.

நேற்று (26) பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண்களை குளவிகள் கொட்டத் ​தொடங்கியதாகவும்,இதன்​போது ஏனைய பெண்களை விட குறித்த மூவரும் அதிகம் குளவிக்கொட்டுக்கு இலக்காகியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட மூன்று பெண்களும் மடுல்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் பின்னர், ஒருவர் சிகிச்சைப் பெற்று வெளியேறியுள்ள நிலையில், ஏனைய இருவரும் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X