2025 மே 05, திங்கட்கிழமை

நோர்வூட்டில் பெண்ணின் சடலம் மீட்பு

Editorial   / 2023 டிசெம்பர் 12 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம். ஹேவா

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்பட மேற்பிரிவு  தோட்டத்தில் உள்ள கால்வாயில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கடந்த 11 ஆம் திகதி மாலை 5.00 மணியளவில் மீட்க்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த தோட்டத்தில் வசித்து வந்த சுமார் 80 வயது மதிக்கத்தக்க முத்து வீரம்மன் என்பவருடைய சடலமே இவ்வாறு மீட்கப்பட்டு என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர் தெரிவித்ததாகவும், இந்த மரணம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X