Freelancer / 2024 ஜனவரி 20 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். கீதபொன்கலன்
திருகோணமலை பொது வைத்தியசாலையில் நோயாளியை கொண்டு செல்வதற்கு சக்கர நாற்காலி வழங்கப்படாமையால் அவரின் உறவினர்கள் நோயாளியை தூக்கிக் கொண்டு சென்ற சம்பவம் நேற்று (19) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை வைத்தியசாலையில் எலும்பு முறிவுக்கு உள்ளாகி சிகிச்சை பெறுவதற்காக சென்ற நோயாளியை கொண்டு செல்வதற்கு சக்கர நாற்காலி வழங்கப்படவில்லை எனவும் இதனால் நோயாளியை தூக்கிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுபோன்ற பல சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் இதனால் நோயாளிகள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிய வருகின்றது.
அத்துடன் நோயாளிகளுக்கான கட்டில்கள் பற்றாக்குறையின் காரணமாக தரையில் காட்போட் அட்டைகளை விரித்து படுக்க வேண்டி இருப்பதாகவும் நோயாளிகள் கவலை வெளியிடுகின்றனர்.
திருகோணமலை வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர்கள், மருந்து மற்றும் வைத்தியசாலை உபகரணங்களின் பற்றாக்குறையின் காரணமாகவும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாகவும் சிறந்த சேவையினை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாகவும் நேயாளிகள் விசனம் வெளியிடுகின்றனர். R
10 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago