2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

நோர்வுட் பாடசாலைகளுக்கு வந்த மாணவர்கள் திருப்பியனுப்பப்பட்டனர்

Kogilavani   / 2020 டிசெம்பர் 07 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ், எம்.கிருஸ்ணா

நோர்வூட் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளுக்கு, இன்று(7) காலை வந்த மாணவர்கள், பாதுகாப்புக் கருதி திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். 

நோர்வுட் நிவ்வெளி தமிழ் வித்தியாலயம், அயரபி தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றுக்கு வந்த மாணவர்களே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

நோர்வுட் தமிழ் மகா வித்தியாலயத்தில் பணிபுரிந்து வந்த ஆசிரியை ஒருவருக்கு
தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்தப் பாடசாலை   காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நோர்வுட் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களோடு
தொடர்புகளை பேணியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மேற்படி பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் திருப்பியனுப்பப்பட்டனர் என்று, பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த பாடசாலைகளுக்கு, குறைந்தளவான மாணவர்களே உள்வாங்கப்பட்டுள்ளனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X