2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

நோர்வூடிலுள்ள ஆடைத்தொழிற்சாலைக்குப் பூட்டு

Kogilavani   / 2020 டிசெம்பர் 07 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

சுகாதார பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, நோர்வூட் பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலை இன்று (07) மூடப்பட்டதாக, தொழிற்சாலையின் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

நோர்வூட் பகுதியில் ஆசிரியையொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த ஆசிரியர்களும் மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இம்மாணவர்களின் பெற்றோர் யாராவது குறித்த தொழிற்சாலையில் பணிபுரிகின்றனரா என்பதைக் கண்டறிவதற்காகவும் அவ்வாறு இனங்காணப்பட்டால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவுமே தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதாக, நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 

இன்று(7) மாலை சுகாதார அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாகவும் அதன் பின்னர் வழமைபோல் தொழிற்சாலை, சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தொழிற்சாலையில் இதுவரையில் 70 பேர் வரை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் எனினும், எவருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X