Kogilavani / 2020 டிசெம்பர் 10 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில், கடந்த 8 ஆம் திகதி 160 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அவர்களில் எவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மேற்படி வித்தியாலயத்தின் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, பாடசாலையானது காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதுடன், ஆசிரியருடன் தொடர்பைப் பேணிய ஆசிரியர், மாணவர்கள் உள்ளடங்களாக 160 பேருக்கு, நேற்று முன்தினம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பரிசோதனை முடிவுகள் இன்று கிடைக்கப்பெற்ற நிலையில், எவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பாடசாலையைத் தொற்றுநீக்கம் செய்து மீளத் திறப்பதுத் தொடர்பில், இன்று (10) சுகாதார அதிகாரிகள், ஹட்டன் பணிமனையுடன் கலந்துரையாடியப் பின் தீர்மானிக்கப்படும் என்று, மஸ்கெலியா பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
9 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Jan 2026