Kogilavani / 2020 டிசெம்பர் 08 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா, எஸ்.சதிஸ்
ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, இன்று (8) பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்படி வித்தியாலயத்தில் கடமையாற்றும் பொகவந்தலாவைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, 72 ஆசிரியர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டதுடன், பாடசாலையும் மறு அறித்தல்வரை மூடப்பட்டு கிருமிதொற்று நீக்கப்பட்டது.
இந்நிலையில் மஸ்கெலியா பிரதேச பொது சுகாதர வைத்திய அதிகாரி டி.சந்திரராஜனின் பணிப்புரைக்கமைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான ஆசிரியையோடு நெருங்கிய தொடர்பைப் பேணியவர்கள், இன்று பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
மாதிரிகள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுவதுடன் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றவுடன் பாடசாலையினை மீள ஆரம்பிக்கப்படுவதுத் தொடர்பில் ஆலோசிக்கப்படும் என்று, மஸ்கெலியா பொதுசுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.


22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026