Janu / 2025 செப்டெம்பர் 25 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன்-மஸ்கெலியா பிரதான வீதி, நோர்வூட் பகுதியில் பாடசாலை பேருந்தொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் வியாழக்கிழமை (25) காலை 7.30 மணியளவில் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் கல்வல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற பாடசாலை பேருந்தும் ஹட்டனில் இருந்து நோர்வூட் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளுமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
அப்பகுதியில் பெய்த கனமழை மற்றும் வழுக்கும் வீதி காரணமாக மோட்டார் சைக்கிளின் தடை செயலிழந்து சறுக்கி விழுந்ததே விபத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிறு காயங்களுடன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமசந்திரன்

1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago