2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நான்கு விபத்துகளில் மூவர் பலி: சிறுவன் படுகாயம்

Gavitha   / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், கு.புஸ்பராஜா, மொஹொமட் ஆஸிக்

மஸ்கெலியா- சாமிமலை, டயகமை ஈஸ்ட், கண்டி - பொக்காவல மற்றும் வெலிமடை ஆகியப் பகுதிகளில், நேற்று, புதன்கிழைமை மாலை இடம்பெற்ற நான்கு விபத்துகளில், 55, 45 வயதுடைய இரண்டு பெண்கள், இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன், 19 வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில், நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பஸ்ஸின் முன் சில்லில் சிக்குண்டு 55 வயது பெண்ணொருவர் பரிதாபகரமாக பலியானச் சம்பவம், சாமிமலையில் இடம்பெற்றுள்ளது.

ஸ்டெஸ்பி தோட்டத்தைச் சேர்ந்த முத்தையா அமரஜோதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சாமிமலையிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸில் பயணித்த மேற்படிப் பெண்ணே,கவரவில சந்தியில் வைத்து பஸ்ஸிலிருந்து இறங்கி, வீதியை கடக்க முயன்றபோது, தான் பயணித்த அதே பஸ்ஸில் மோதுண்டு, பஸ்ஸின் முன் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தையடுத்து பிரதேச மக்கள் கவரவில சந்தியில் ஒன்றுதிரண்டதுடன் கற்களை எறிந்து குறித்த பஸ்ஸை சேதப்படுத்தியதால் அப்பகுதயில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. பொலிஸாரின் தலையீட்டையடுத்து, நிலைமைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

டயகமவில் இருந்து டயகம ஈஸ்ட் 15க்கு சென்ற தனியார் பஸ்ஸில் பயணித்த சிறுவன், பஸ்ஸிலிருந்து இறங்கும்போது, அதே பஸ்ஸின் சில்லி கிக்குண்டு படுகாயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன், டயகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அந்த பஸ்ஸின் சாரதியை, டயகம பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டியிலிருந்து பொக்காவலை நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸூடன், மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில், பொக்காவல, வேவல பிரதேசத்தைச் சேர்ந்த யூ.ஜீ.மானெல் (வயது 45) என்பவர், புதன்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக, கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த மேற்படி பெண், பொக்காவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியை கைதுசெய்துள்ள கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், வெலிமடை, பொரலந்த பகுதியில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் புதன்கிழமை மாலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பொரலந்த பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .