Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Kogilavani / 2015 நவம்பர் 04 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமசந்திரன்
நோர்வூட் பிரதேசத்தில் புதிதாக ஆரம்பப் பாடசாலையை ஆரம்பிப்பதற்கு மத்திய மாகாண சபையும்; வலயக் கல்விப் பணிமனையும் அனுமதியளித்துள்ளதாக மத்திய மாகாண சபை கல்வி அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயமானது ஆயிரம் பாடசாலை திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டதையடுத்து, இப்பாடசாலையில் இயங்கிவந்த ஆரம்ப பிரிவு நீக்கப்பட்டது. இதனால் நோர்வூட் மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளிலிருந்து ஆரம்பப் பிரிவுக்காக மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட வில்லை.
இதனால், ஆரம்பப் பிரிவுக்கு மாணவர்களை வேறு இடங்களிலுள்ள பாடசாலைகளில் சேர்க்க வேண்டிய நிர்பந்தத்துக்கு பெற்றோர் தள்ளப்பட்டனர். மாணவர்கள் பல கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள பாடசாலைக்கே சென்று வந்தனர்.
இந்நிலையில் நோர்வூட் பிரதேசத்திலே ஆரம்ப பாடசாலையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஜூன் 08ஆம் திகதி பெற்றோர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
புதிய ஆரம்ப பாடசாலை நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஒரு கட்டடத்தில் தற்காலிகமாக இயங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அடுத்த வருடத்தில் புதியதோர் இடத்தில் புதிய கட்டடத்துக்கு இப்பாடசாலையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
'நோர்வூட்டில் புதியஆரம்ப பாடசாலையை ஆரம்பிக்க வேண்டுமென்ற எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய மாகாண கல்வித்திணைக்கள அதிகாரிகளுக்கும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்' என அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago
8 hours ago