Kogilavani / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
'மஹாவலி கங்கையின் கரையோரத்தில் வாழும் மக்களுக்கும்குடி நீர் தட்டுப்பாடு நிலவுகின்றது என்பது வேடிக்கையானது' என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர் வளங்கள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
'நீர் வழங்கல் திட்டங்களை இன்னும் இரண்டு மடங்காக விஷ்தரிப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு நிதியுதவிகளைப் பெற்று அந்த பாரிய செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தப்படும்' எனவும் அவர் கூறினார்.
கம்பளை, பெல்வதுர பிரதேச மக்களுக்கு, குடிநீர் இணைப்பை வெள்ளிக்கிழமை (30) பிற்பகல் கையளித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் அங்கு மேலும் கூறுகையில்,
'ஒரு புறத்திலே மகாவலி கங்கை ஓடிக்கொண்டிருக்கின்ற நிலையில் அதன் ஒரு கரையிலிருக்கின்ற மக்களுக்கு, குடிநீர் தட்டுப்பாடு என்கின்ற விஷயம் அதிசயத்திலும் அதிசமான விடயமாகும்;.
குறிப்பாக இந்த குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கின்ற முயற்சியில், எம்முடைய கட்சிக்கு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் பேரில் இந்த ஒதுக்கீட்டைச் செய்து, மிக அவசரமாக சிறிய அளவிலான குடிநீர் திட்டத்தை இங்கு ஆரம்பித்து வைக்கின்றோம்.
இந்நீர் இணைப்பின் மூலம் பெல்வதுர பிரதேசத்தில் சுமார் 100 குடுமபங்கள் நன்மையடைவர்' என்றார்.
வறட்சி காரணமாக நாம்; எம்முடைய நீர் விநியோகத்தை வெகுவாக கட்டுப்படுத்தியிருக்கின்றோம். பல இடங்களிலே தட்டுப்பாடுகள் நிலவுகின்ற ஒரு சூழலில்தான், இந்த நீர் வழங்கல் திட்டத்தை சிறியளவில் நாங்கள் இங்கு ஆரம்பித்து வைக்கின்றோம்.
ஆட்சி மாற்றத்துக்கு கம்பளை தேர்தல் தொகுதியும் பாரிய பங்களிப்பு வழங்கியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர், இந்த தொகுதியை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றுவதற்கான பங்களிப்பை கம்பளை மக்கள் வழங்கியிருக்கின்றார்கள்;, அதிலும் கம்பளைத் தொகுதியில் வாழுகின்ற சிறுபான்மை வாக்காளர்கள் அந்த பங்களிப்பை செய்கின்றார்கள்' என்றார்.
35 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago