2026 ஜனவரி 21, புதன்கிழமை

பசறையில் இரத்தினக்கல் அகழ்வு; மூவர் கைது

Freelancer   / 2021 ஜூலை 24 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

பசறை - கலபட பெருந்தோட்டப் பிரிவில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் பசறை பொலிஸாரால் இன்று(24) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இரத்தினக்கல் அகழ்விற்கு பயன்படுத்திய பெருமளவிலான உபகரணங்களையும் பொலிஸார் மீட்டனர்.

பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரட்னவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினை அடுத்து, பொலிஸார் குறித்த இடத்தை சுற்றிவளைத்து, தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர்.

அவ் வேளையிலேயே, இரத்தினக்கல் அகழ்ந்து கொண்டிருந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர், பதுளை நீதவான் நீதிமன்றில்  ஆஜர் செய்யப்படுவார்கள் என, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தெரிவித்தார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X