R.Maheshwary / 2022 ஜூன் 13 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
நுவரெலியா மாவட்டத்தில் தனியார் மற்றும் அரச காணிகளில் உள்ள பலாக்காய்களை பறித்து, வட்டவளை பிரதேசத்திலுள்ள தனியால் விலங்குப் பண்ணையிலுள்ள கால்நடைகளுக்கு உணவாக வழங்கும் திட்டத்தை இடைநிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.ஸ
குறித்த பண்ணையில் அதிகளவான பசுக்கள் காணப்படுவதுடன், அவற்றுத் தேவையான புற்கள், சோளம் , புண்ணாக்கு என்பவற்றின் விலை அதிகரிப்பால், குறித்த பண்ணையின் நிர்வாக அதிகாரி, பலாக்காய்களை கொள்வனவு செய்து அவற்றை சிறிய துண்டுகளாக்கி பண்ணையிலுள்ள பசுக்களுக்கு வழங்குவதாக வட்டவளை பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
உணவு பாதுகாப்ப வேலைத்திட்டத்தின் கீழ், நுவரெலியா மாவட்டத்தில் பலா மரங்களை தறிப்பது தடைசெய்யப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், குறித்த பண்ணைக்காக அதிகளவு பலாக்காய்களை பறிக்கப்படுவதாகவும் இதற்காக மாவட்டம் முழுவதும் பல வாகனங்களைப் பயன்படுத்தி, பலாக்காய்கள் பறிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடுகள் குறித்து கினிகத்தேனை பிரதேச செயலகப் பிரிவுள்ள பல கிராம மக்களை தெளிவுப்படுத்தியதை அடுத்து, பலாகாய்களை பறிக்க வாகனங்களில் வருகைத் தந்தவர்கள் கிராமவாசிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
தினமும் மேலதிக வருமானங்களைப் பெற்றுக்கொள்வதற்காக குறித்த பண்ணையில் தொழில் புரியும் பலர், நுவரெலியா மாவட்டத்துக்குள் மாத்திரம் அல்லாது ஏனைய பிரதேசங்களுக்கும் சென்று பலாக்காய்களை குறைந்த விலையில் பெற்று பண்ணைக்கு கொண்டு செல்வதாகவும் வட்டவளை பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago