2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

பட்டாசு கொளுத்தியவர்களை பந்தாடிய லொறி

Editorial   / 2025 ஒக்டோபர் 20 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை நகர மையத்தில் திங்கட்கிழமை (20) அதிகாலை பட்டாசுகளை கொளுத்தி கொண்டிருந்த போது, ​​வேகமாக வந்த லொறி மோதியதில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்ததாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அதிகாலை 12:30 மணியளவில் தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. அதிவேகமாக வந்த லொறி, இரு இளைஞர்களையும் மோதிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

பின்னர் தலவாக்கலை, கிராண்ட் வெஸ்டன் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் மறைந்திருந்த சந்தேக நபரான லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்தனர்.

காயமடைந்த இளைஞர்கள் முதலில் லிந்துல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

சம்பவம் குறித்து தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .