2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

பொடிமெனிக்கே ரயில் தடம் புரண்டது

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 11 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயில், வியாழக்கிழமை (11) அன்று பதுளை மற்றும் ஹாலிஎல ரயில் நிலையங்களுக்கு இடையில் 178வது மைல்கல் அருகே தடம் புரண்டதால், மலையக ரயில் பாதையில் பதுளை-கொழும்பு கோட்டை ரயில் சேவை பாதிக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலை 8.50 மணிக்கு பதுளையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு பயணத்தை தொடங்கிய பொடிமெனிகே ரயில் டைனிங் கார் தடம் புரண்டது.

எனவே, காலை 10.20 மணிக்கு பதுளையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு புறப்படவிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் காலை11.45 மணிக்கு பதுளையில் இருந்து கண்டிக்கு புறப்படவிருந்த கலப்பு சரக்கு ரயில் வியாழக்கிழமை (11) அன்று பின்நேர பகுதியில்  புறப்பட உள்ளது, மேலும் தடம் புரண்டரயில் டைனிங் கார் பழுது பார்ப்பதற்காக ஒரு குழு பதுளை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு உள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .