2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

படிக்கட்டுகளில் தவறி விழுந்து ஒருவர் மரணம்

Freelancer   / 2021 டிசெம்பர் 11 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

தலவாக்கலை - ஹொலிரூட்  பகுதியில் படியில் தவறி விழுந்து ஆண் ஒருவர்  உயிரிழந்துள்ளதாக  தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான இராமையா இந்திரகுமார் வயது (52)   என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இவரது மனைவி சில வருடங்களுக்கு முன் உயிரிழந்ததாகவும் வீட்டில் இவர் மாத்திரம் வசித்து வந்ததாகவும், இவரின் ஒரே ஒரு மகன் கொழும்பில் வேலை செய்து வருவதாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை (10) நேற்று மாலை குறித்த நபர் மது போதையில் தமது வீட்டிலிருந்து படிக்கட்டுகளில் இறங்கி வரும்போது தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

சடலத்தை பிரேத  பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதோடு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X