Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
உமாமகேஸ்வரி
அரசாங்கம், நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டும் மஹர சிறைச்சாலை குறித்து வெளியிடும் தகவல்களும், உண்மைக்குப் புறம்பானது என, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கோப் குழுவின, முன்னாள் தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
இரத்தினபுரி பௌத்த கலாசார மண்டபத்தில், நேற்று (01) மாலை நடைபெற்ற கூட்டமொன்றில், பிரதம அதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாறு போலித் தகவல்களை சமர்ப்பித்து, நாட்டு மக்களையும் நாட்டையும் இந்த அரசாங்கம் பிறரிடம் கையேந்தும் அவலநிலைக்குத் தள்ளியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
உலக நிதி நிறுவனங்களின் தாரப்படுத்தலுக்கமைய, இலங்கை மிகவும் அவதான நிலையிலுள்ளது எனக் கூறிய அவர், இலங்கைக்கு எந்தவொரு நாடோ, எந்தவொரு உலக நிதி நிறுவனங்களோ கடன் வழங்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கடன் வழங்கினால் மீளப் பெற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிந்தமையாலேயே, எந்தவொரு நாடும் கடன் வழங்கத் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடரும் பட்சத்தில், இலங்கை மக்கள் இன்னும் 6 மாதகாலப்பகுதிக்குள் பட்டினி சாவை எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் என்று அவர் மேலும் கூறினார்.
நாட்டில், உற்பத்திகள் அதிகரிக்கவேண்டும் எனத் தெரிவித்த அவர், ஆனால், 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், இதற்கான எந்தவொரு முன்மொழிவும் இருக்கவில்லை என்றும் எனினும், நாட்டை விற்பனை செய்வது, கடன் பெறுவது குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago