Sudharshini / 2015 ஒக்டோபர் 04 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் மற்றும் படுகொலைகளுக்கு எதிராக புதிய சட்டம் ஒன்றை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் எனக்கோரி வட்டவளை பிரதேச மக்கள், வட்டவளை நகரத்தில் இன்று (04) சுமார் 1 மணி நேரம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
வட்டவளை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நாட்டில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்தவேண்டும், துஷ்பிரயோகங்களில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்; எனக்கோரினர்.
அத்தோடு, துஷ்பிரயோகங்களை தடுக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் கொடுக்கும் முகமாக இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 May 2026
02 May 2026