Kogilavani / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீள்தவதற்காக, தம்மிக்க பண்டாரநாயக்க என்பவரால் தயாரிக்கப்பட்டுள்ள பாணியானது மிகவும் ஆரோக்கியமானது என்றுத் தெரிவித்துள்ள நீர்வளத்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அந்தப் பாணியை தானும் விரும்புவதாகவும் தனது வீட்டிலும் அதனைத் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்துரைத்துள்ள அவர், தம்மிக்கவால் தயாரிக்கப்பட்டுள்ள பாணியை யாரும் வேடிக்கையாகக் கருதிவிட வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
கொவிட் வைரஸ் தடுப்புப் பாணியானது, ஆரோக்கியமானது என்றும் இந்நாட்டின் மூலிகைகளான தேன், இஞ்சி கொத்தமல்லி போன்றவற்றைப் பயன்படுத்தியே தம்மிக்க இந்தப் பாணியைத் தயாரித்துள்ளார் என்றும் தெரிவித்தார்.
இந்த மூலிகைகள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உயர்ந்தது என்றுத் தெரிவித்த அமைச்சர், இதனை பலர் வேடிக்கையாகக் கருதுவதாகவும் சாடினார்.
'இந்த ஆரோக்கியமான பாணியை, கடவுள்களின் பெயரை வைத்து சிலர் ஏலனமாக சித்தரிக்கின்றனர். கடவுளின் பெயரைக் கைவிட்டு இதில் அடங்கியுள்ள மூலிகைகளின் பயனை கவனத்திற்கொள்ளவும்' என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago