2026 ஜனவரி 21, புதன்கிழமை

பதுளையில் ஆர்ப்பாட்டம்

Ilango Bharathy   / 2021 ஜூன் 29 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையால், பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள்
பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து, பதுளை நகரில் நேற்று (28) பெற்றோர் மற்றும் அசிரியர்கள்
ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இதன்போது ”அதிகார வர்க்கத்தினர் சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும், தமது பிள்ளைகள் கல்விக்காக மரங்களிலும், மலைகளிலும் ஏற வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கவலை” தெரிவித்திருந்தனர். 


அத்துடன்,“ உடனடியாகக் கல்விக்கு தேசிய தொலைக்காட்சியொன்றை முழுமையாகப்
பெற்றுக்கொடுக்குமாறும், இணையவழி கல்வி அவசியமற்றதென்றும் இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவதாகவும்“ கோஷங்களை எழுப்பியும் பதாகைகைளை ஏந்தியும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X