Freelancer / 2023 மார்ச் 09 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் தொழிற்பயிற்சி நிலையங்களின் ஊடாக அவரவரின் திறமைக்கேற்ப தொழிற்பயிற்சிகளை வழங்க விஷேட திட்டமொன்றை முதற்கட்டமாக 11ஆம் திகதி சனிக்கிழமை பதுளை மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பின்னர் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே உயர்தரத்தில் கல்வியைத் தொடர்கின்றனர். பல்வேறு திறமைகளைக் கொண்டுள்ள மாணவர்கள் சாதாரண தரத்தின் பின்னர் உயர்தரத்துக்கு செல்லமுடியாத நிலையில் தொழிலின்றி அவலப்படுவதை காணமுடிகிறது.
அவ்வாறானவர்களை ஊக்கப்படுத்தி அவர்களும் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ளும் வகையிலேயே இந்த பயிற்சி திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
பதுளை சரஸ்வதி தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அண்றைய தினம் காலை 9.00 மணிக்கு பயிற்சிக்கான அங்குரார்ப்பண செயலமர்வு இடம்பெறவுள்ளது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago