Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 29 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
பதுளை மாநகர சபையால் சேகரிக்கப்படும் பொலித்தின் கழிவுகளை புத்தளம் சீமெந்து
தொழிற்சாலைக்காக அனுப்ப பதுளை மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
பதுளை மாநகர சபையின் கழிவுகள் பிரிவில், மீள்சுழற்சிக்கு உட்படுத்த முடியாத பொலித்தீன்
வேறாக்கப்படுவதாகவும், இவ்வாறு வாராந்தம் 18 டொன் பொலித்தின் சேகரிக்கப்படுவதாகவும் மாநகர சபையின் மேயர் பிரியந்த அமரசிறி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு புத்தளத்துக்கு அனுப்பபடும் பொலித்தீன் கழிவுகள், குறித்த சீமெந்து நிறுவனத்தின்
செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளதென்றும் இதனால் பதுளை நகரில் ஏற்படும் கழிவுப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் மேயர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .