2025 டிசெம்பர் 03, புதன்கிழமை

பதுளை-பசறையில் அமைச்சர் கண்காணிப்பு விஜயம்

S.Renuka   / 2025 டிசெம்பர் 03 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை மாவட்டத்தை பாதித்த கடுமையான பேரழிவால் சேதமடைந்த பதுளை-பசறை பிரதான வீதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன சமீபத்தில் விசேட ஆய்வு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டார்.

வீதியில் முக்கியமாக தடைபட்டிருந்தது 8ஆம் கனு மற்றும் 5 ஆம் கனுவுக்கு அருகிலுள்ள சேதமடைந்த பகுதிகள் மற்றும் நிலச்சரிவு நிலைமைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சமூகத்தின் தேவைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் வீதியை மீண்டும் போக்குவரத்துக்கு பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இராணுவக் குழுக்களையும் சந்தித்த அமைச்சர், வீதித் தடைகளை அகற்றுவதில் உள்ள முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் தேவைப்படும் ஆதரவு குறித்தும் கலந்துரையாடினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X