R.Maheshwary / 2021 டிசெம்பர் 21 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
பதுளை கோபோ பெருந்தோட்ட பகுதியைச் சேர்ந்த மாணவியொருவர், நேற்று முன்தினம் (19) காணாமல் போன நிலையில், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பதுளை நகரில் உள்ள பிரத்தியேக வகுப்புக்கு சென்று வீடு திரும்பாத நிலையில், பொலிஸார் மற்றும் பொதுமக்களால் தேடப்பட்டு வந்தார்.
இதேவேளை, குறித்த யுவதியின் பாதணிகள் அடையாள அட்டை, அலைபேசி, புத்தகப்பை என்பன கோபோ தோட்டத்திலுள்ள குளத்துக்கு அருகிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அதே குளத்திலிருந்து மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மாணவியின் சடலம் அவரது தாயாரால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளுக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை காற்ரூப்ப பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து செல்கின்றனர்.
28 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago