2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

பதுளை மாவட்டத்தில் சீரற்ற வானிலை; இயல்பு வாழ்க்கைப் பாதிப்பு

Kogilavani   / 2021 ஜனவரி 03 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜா மலர்வேந்தன்

பதுளை மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக நீடித்துவரும் சீரற்ற வானிலை காரணமாக, மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

இம்மாவட்டத்தில் கடும் மழை பெய்துவருவதுடன் பனிமூட்டமும் அதிகரித்து, கடும் குளிருடனான வானிலை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சீரற்ற வானிலை காரணமாக பிரதான வீதிகளில் மண்சரிவு அபாயம் நிலவுவதால், மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு வாகன சாரதிகளுக்குப் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். 

குறிப்பாக லுணுகலை - பிபிலை பிரதான வீதி,  பசறை - நமுனுகுல வீதி, எல்ல - வெல்லவாய வீதி, மடுல்சீமை - பிட்டமாறுவ பிரதான வீதி போன்றவற்றில் மரங்கள், கற்கள் வீதிகளில் சரிந்துவிழும் அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

அத்துடன் அதிக பனிமூட்டமும் பாதை வழுக்கல் தன்மையுடனும் காணப்படுவதால் பதுளை - பண்டாரவளை - ஹப்புத்தளை ஊடான கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X