Ilango Bharathy / 2021 டிசெம்பர் 27 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
”மலையகத்துக்கான பத்தாயிரம் வீட்டுத்திட்டம் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும். என
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான
மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்றைய தினம், பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரனின் 45ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கார்லபேக் தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைத்த நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், கொரோனா நெருக்கடி காலத்திலும் நாட்டுக்கு தேவையான முக்கியமான அபிவிருத்தி திட்டங்கள் நிறுத்தப்படவில்லை. அதற்கான பணிகளை நிதி அமைச்சர் சிறந்த முறையில் முன்னெடுத்து நிதிஒதுக்கீடுகளை வழங்கிவருகின்றார். மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டமும் விரைவில்
ஆரம்பிக்கப்படும்.
மலையக சமூகத்தின் வளர்ச்சியென்பது கல்வியில்தான் தங்கியுள்ளது என்பதை நாம் உறுதியாக நம்புகின்றோம். அதனால்தான் ஐயா சௌமியமூர்த்தி தொண்டமான், தலைவர் ஆறுமுகன் தொண்டமான் காலம் முதல் இன்றுவரை கல்விக்கு நாம் அதிக நிதியை ஒதுக்குகின்றோம். கல்வி சார்ந்த அபிவிருத்தி திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றோம். உதவிகளை செய்கின்றோம்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராகவும் இன்று அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இந்நிலைமை மாறுவதற்கும் கல்வியே எமக்கு கைகொடுக்கும். எமது பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் கண்டால் நிச்சயம் வீறுநடை போடலாம். அதற்கு
பக்கபலமாக காங்கிரஸ் துணை நிற்கும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .