2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பதுளை தபால் ரயிலிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2017 ஏப்ரல் 21 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த தபால் ரயிலிலிருந்து ஆணொருவரின் சடலத்தை, பதுளை புகையிரத நிலைய அதிகாரிகள், இன்றுக் காலை  மீட்டு, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ரயில் பயணித்த டீ.ஏ.கித்சிறி என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

பதுளை ரயில் நிலையத்தில் தரித்து நின்ற புகையிரதத்தை சோதனை செய்த ரயில் நிலைய அதிகாரிகள், அதில் மேற்படி பயணி மட்டும் வீழ்ந்துக்கிடப்பதை கண்டுள்ளதுடன் அவரை மீட்டு உடனடியாக வைத்தியசாலையில் சேர்த்தனர்.

எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இவர் நோயொன்றுக்காக ஏற்கனவே சிகிச்சைப் பெற்று வருவதற்கான மருத்து அட்டையையும் ரயில்வே திணைக்கள அதிகாரிகள் கண்டெடுத்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .