Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 23 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
முதன் முறையாக மலையக இளைஞர்,யுவதிகளின் சுயத்தொழிலை ஊக்குவிக்கும் முகமாக, டயகம பிரஜாசக்தி நிலையத்தினால் தெரிவு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் விவசாயத்தின் ஊடாக தமது சுயத்தொழில் முயற்சியில் ஈடுப்பட்டு பலன் பெற்று வருவதாக, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நாட்டில் சுமுகமான சூழ்நிலை தோன்றும் போது அனைத்து விதமான கூட்டுப்பண்ணை
செயற்பாடுகளும் முறையாகவும் தொடர்ச்சியாகவும் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்படுமென, அவர் தெரிவித்தார்.
மேலும் மலையகத்தின் ஏனைய பகுதிகளிலும் மலையக இளைஞர், யுவதிகளின் சுயத்தொழிலை ஊக்குவிக்க பிரஜா சக்தியினூடான வேலைத்திட்டம் எதிர் வரும் காலத்தில் விரைவாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் “சௌபாக்கியத்தின் நோக்கு” வேலைத்திட்டத்திற்கு
அமைவாக, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க
அமைச்சின் கீழ் இயங்கும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் ‘பிரஜா சக்தி‘ நிலையம் இந்த சுயத்தொழில் ஊக்குவிப்புக்கு சக்தி வழங்கியுள்ளது.
இதற்கமைய, டயகம பிரதேசத்தில் ‘பிரஜா சக்தி‘ ஊடாக கூட்டு பண்ணையாளர்கள் உள்ளிட்ட விவசாய பயிற்சிக்கென தெரிவு செய்யப்பட்ட இளைஞர்,யுவதிகளுக்கு கடந்த காலங்களில்
பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .