2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு நெருக்கடி

Editorial   / 2018 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

ஹட்டன் பிரதேசத்திலுள்ள தமிழ்ப் பாடசாலையொன்றில், உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிக்கொண்டிருந்த மாணவர்களுக்கு, பரீட்சை நிலையத்தின் மேற்பார்வையாளர் ஒருவர் நெருக்கடி கொடுத்துள்ளதால், அந்த மாணவர்கள், உளவியல் ரீதியாகப் பாதிப்படைந்துள்ளனர் என, ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

குறித்த பரீட்சை நிலையத்தில், 159 மாணவர்கள் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த நிலையில், மேலதிகமாக நியமிக்கப்பட்டிருந்த மேற்பார்வையாளர் ஒருவர், திடீரென சில மாணவர்களை சோதனைக்கு உட்படுத்தியுள்ளார் என்றும், இதனால் மாணவர்கள் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பு, மாணவர்களைச் சோதனையிடுவதற்கான அதிகாரம் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அவர், இவ்வாறான செயற்பாடுகள், மாணவர்களை உளவியல் ரீதியில் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தால் பாதிப்புக்கு உள்ளான மாணவர்களின் பெற்றோர் வழங்கிய தகவல்களுக்கு அமைவாக, இவ்விடயம் குறித்து, பரீட்சைகள் ஆணையாளரிடத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X